×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் முகேன் வீட்டில் நேர்ந்த பெரும் சோகம்! வேதனையில் கதறும் குடும்பத்தார்கள்! கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்!

bigbass mugen father passed away

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வென்று முதலிடம் பிடித்தவர் பாடகர் முகேன் ராவ் .

மலேசியாவை சேர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பெருமளவில் பிரபலமானார். மேலும் இவர் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் மிகவும் நட்புடனும், அன்பாகவும் நடந்து கொண்டார். 

பாடகர், நடிகர், மாடலிங் என பன்முக திறமை கொண்டு விளங்கிய முகேன் சத்தியமா என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார். முகேன் ராவின் தந்தை பிரகாஷ் ராவ். 52 வயது நிறைந்த அவர் நேற்று மாலை 6.20 மணியளிவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அதனை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pigboss mugen #prakash rav #dead
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story