தர்ஷனின் வெளியேற்றத்திற்கு நீ தான் காரணம் அதிரடியாக பேசிய வத்திகுச்சி வனிதா! இரண்டான வீடு - தீயாய் பரவும் வீடியோ.
Big boss 3 vanitha sherin tharshan

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 4 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றுடன் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துள்ளது. அதனால் தினமும் விருத்தினராக சிலர் உள்ளே சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி நேற்று பிக்பாஸ் சூப்பர் சிங்கர் குழுவை உள்ளே அனுப்பி மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று வனிதா, சாக்ஷி போன்ற வெளியே சென்ற போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர். வனிதா வந்தது தன் வேலையை காட்ட ஆரம்பி விட்டார். அதாவது தர்ஷனின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம் ஷெரின் தான் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.