தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பொண்ணு ரெடி.. "எப்பவும் எனக்காக இருப்பீங்களா அமீர்?.. ஐ லவ் யூ" - தனது காதலை ஓபனாக கூறிய பாவனி..!!

பொண்ணு ரெடி.. எப்பவும் எனக்காக இருப்பீங்களா அமீர்?.. ஐ லவ் யூ - தனது காதலை ஓபனாக கூறிய பாவனி..!!

bhavani Marriage Amir Instagram Post Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் கலந்து பிரபலமடைந்தவர்கள் அமீர் மற்றும் பாவனி. விஜய் டிவியின் சின்னத்திரையில் நாயகியாக வலம்வந்த பாவனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் தனது வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டார். 

Bhavani Marriage

அதன்படி கணவரை இழந்த அவர் தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை வாழ்ந்து கொண்டிருப்பதாக பகிர்ந்திருந்தார். இதற்கிடையில் வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளராக விஜய் டிவி கொரியாகிராபரான அமீர் உள்ளே வந்ததை தொடர்ந்து பாவனியிடம் விளையாட்டாக ஆரம்பத்தில் பேசினாலும், பின் சீரியஸாக தனது காதலை சொல்ல தொடங்கினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை மையமாக வைத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சி நடந்துவந்தது. பிபி ஜோடியின் இரண்டாவது சீசனில் டான்சராக பங்குபெற்ற அமீர் மற்றும் பாவனி டான்ஸ் போட்டியில் திருமணம் செய்துகொள்ளும் காட்சிகள் கூட அரங்கேறியிருந்தது.

இந்த நிலையில் பி.பி ஜோடிகள் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இருவரும் தற்போது வெற்றி கோப்பையை கைப்பற்றி இருக்கின்றனர். இது குறித்து பாவனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பது ரசிகர்கள கொண்டாட வைத்துள்ளது. 

அதில், தம் ஒப்பனையாளர்களுக்கு நன்றி சொன்ன பாவ னி அமீர் குறித்து பேசும்போது, "அமீர் மாஸ்டர் டான்ஸ் ஆடுவது மிகப்பெரிய சவால். அதுவும் ஒரு போட்டியில் ஆடுவது எனக்கு மிகவும் பயம். ஆனால் நீங்கள் நல்ல மாஸ்டர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். சரிவர டான்ஸ் ஆட வராத என்னை வெற்றிபெறும் அளவிற்கு ஆட வைத்துள்ளீர்கள். 

இது மிகச் சிறப்பான பயணம். ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியுடன் அனுபவித்தேன். உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன். நீங்கள் மிகச் சிறந்த மனிதர், மாஸ்டர், நல்ல நண்பர். நமது வாழ்க்கை பயணத்தை சேர்ந்து தொடங்கலாம். 

என்னுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த இணையராக இருங்கள். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். எப்பொழுதும் எனக்காக இருக்கிறீர்களா? எப்போதும் ஐ லவ் யூ" என்று தெரிவித்ததை கண்ட ரசிகர்கள் அப்ப பொண்ணு ஓகே சொல்லியாச்சு என கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bhavani Marriage #Amir #Instagram
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story