மனோஜ் விட்டுட்டு போய்ட்டாரு.. பாரதிராஜா இப்போ அதற்கு அடிமையாகிட்டாரு.! கண்கலங்கிய சகோதரர்!
மனோஜ் விட்டுட்டு போய்ட்டாரு.. பாரதிராஜா இப்போ அதற்கு அடிமையாகிட்டாரு.! கண்கலங்கிய சகோதர்!

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என கொண்டாடப்படும் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ். அவர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான தாஜ்மஹால் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து அவர் அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னகொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் மனோஜ் மரணம்
மேலும் மனோஜ் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த மார்கழி திங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அவர் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வர விரும்பினார். இந்நிலையில் நடிகர் மனோஜ் அண்மையில் தனது 48 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மனோஜ் சாதூரியன் என்ற படத்தில் நடித்தபோது தன்னுடன் நடித்த நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
மீளா துயரில் இயக்குனர் பாரதிராஜா
இந்நிலையில் மனோஜின் மரணம் பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவர்களை குறித்து பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது " மனோஜ் பாரதிராஜாவை ரொம்பவே நன்றாக பார்த்துக்கொண்டார். அவர் போன பிறகு யார் அந்த இடத்திலிருந்து யஅவரை பார்த்துக்கொள்வார் என்பது கேள்விக்குறிதான். மனோஜின் பிள்ளைகள் மீது பாரதிராஜா அளவுகடந்த பாசம் வைத்துள்ளார். நேற்றுகூட காலையிலிருந்து அவர் சாப்பிடவில்லை. குழந்தைகள் சாப்பாட்டை எடுத்து சென்று ஊட்டிவிட்டதும் அவர் சாப்பிட்டார். இப்போது அவர் அவர்களுக்குதான் அடிமையாகியிருக்கிறார் என கலங்கியபடி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!