×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல இயக்குனருக்கு கொரோனா உறுதி! குடும்பத்தினருக்கும் டெஸ்ட்! அவரே வெளியிட்ட தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Bengali director raj chakravorty got corono positive

Advertisement

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் முன்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியனும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தற்போது பிரபல பெங்காலி இயக்குனர் ராஜ் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் அவரது குடும்பத்தார்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில், அனைவருக்கும் முடிவு நெகடிவ் என வந்துள்ளதாகவும் அவரே தெரிவித்திருந்தார். ராஜ் சக்கரவர்த்தி தமிழில் வெளியான காதல், 7ஜி ரெயின்போ காலனி,  சிங்கம், எங்கேயும் எப்போதும், கோ, சென்னை 2008, பொல்லாதவன் ஆகிய படங்களை பெங்காலி மொழியில் ரீமேக் செய்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #Positive #Raj chakraborthy
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story