தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்யபோவது யார் பார்த்தீங்களா! வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்யபோவது யார் பார்த்தீங்களா! வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு!!

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து படம் வெளியாவதற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் வெளியாகி செம ஹிட்டானது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.