அடஅட.. வேற லெவலில் இருக்கே! பீஸ்ட் படப்பிடிப்பிலிருந்து லீக்கான புகைப்படம்! செம வைரல்!!
அடஅட.. வேற லெவலில் இருக்கே! பீஸ்ட் படப்பிடிப்பிலிருந்து லீக்கான புகைப்படம்! செம வைரல்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.
மேலும் அவர்களுடன் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பீஸ்ட் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
மேலும் இந்தப் படத்தின் அப்டேட்டிற்காக தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது. அதாவது பீஸ்ட் படத்திற்காக சென்னையில் மால் செட் போடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது அந்த மால் செட்டிங் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது படக்குழு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.