×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகைகளை ஆபாசமாக பேசும் பயில்வானே பெருமையாக பேசிய நடிகை.. யார் தெரியுமா.?

நடிகைகளை ஆபாசமாக பேசும் பயில்வானே பெருமையாக பேசிய நடிகை.. யார் தெரியுமா.?

Advertisement

தமிழ் சினிமாவில் 90களில் ஆரம்பங்களில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் சுவலட்சுமி. இவர் 1994 ஆம் வருடம் வெளியான உத்ரான் என்ற  திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

முதல் படமே மிகப் பெரும் வெற்றி பெற்று தமிழில் நடிக்க காலடி எடுத்து வைத்தார். முதன் முதலில் தமிழில் 'ஆசை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி லவ் டுடே, நிலாவே வா போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கும் சுவலட்சுமி இன்று வரை ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தை பிடித்துள்ளார்.

இது போன்ற நிலையில், பிரபலமான சமூக வலைதள பத்திரிக்கையாளரான பயில்வான் பல நடிகைகளின் அந்தரங்கம் விஷயங்களை குறித்து ஆபாசமாக யூடியூபில் பேசி வீடியோ வெளியிட்டு வருவார், பல சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வரும் பயில்வான் தொடர்ந்து நடிகைகளை குறிவைத்து ஆபாசமாக பேசி வருவார்.

இந்நிலையில் பயில்வான், நடிகை சுவலட்சுமியை குறித்து பெருமையாக பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, "எத்தனையோ நடிகர்கள் வற்புறுத்தி கேட்டும் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று வலுக்கட்டாயமாக இருந்தார் சுவலட்சுமி. இதனால் ரஜினி படத்தில் கூட நடிக்க மறுத்துவிட்டார். தமிழ் சினிமாவில் சுவலட்சுமி மட்டும் தான் மதிப்பிற்குரிய நடிகை என்று பெருமையாக கூறியிருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bayilvasn #actress #controversy #News #latest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story