×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு, நேரில் சென்று நிதியுதவி வழங்கிய பிரபல மாஸ் ஹீரோ!

தெலுங்கில் ஏராளமான மாஸ் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர்

Advertisement

தெலுங்கில் ஏராளமான மாஸ் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் பவன் கல்யாண். இவர் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பவன் கல்யாண் தற்போது வக்கீல் சாப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்காகும். மேலும் இந்த படமே தமிழில் அஜீத் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என வெளியானது. இப்படத்தை தொடர்ந்து பவன்கல்யாண் அடுத்ததாக மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.

 இந்நிலையில் ஆந்திரா, கிருஷ்ணா மாவட்டத்தில் லிங்கலா கிராமத்தைச் சேர்ந்த பார்கவ்  என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகராம். இதுகுறித்து அறிந்த பவன்கல்யாண் அவரை நேரில் சென்று சந்தித்து மருத்துவ சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் அவரை தைரியமாக இருக்கக் கூறி வெள்ளி கணபதி சிலை ஒன்றையும் வழங்கியுள்ளார். இவரது இந்த செயலை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bavan kalyan #cancer #money
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story