தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏழு வேடங்களில் நடிக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. பாட்ஷா பட இயக்குனர் இயக்குகிறார்.

batsha pada eyakkunarin mega serial

batsha pada eyakkunarin mega serial Advertisement

1980 களில்  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கியவர்.  ரஜினி,  கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் .  பிறகு திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.  சிறந்த நடிகைக்கான பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.  அவர்  தற்போது சினிமாவை காட்டிலும் சீரியல்களில் நடிப்பதில்  தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிக்கும் தொடர்கள்  தற்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளது .  அனைத்து குடும்பங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை  பார்த்து ரசிக்கின்றனர் .

தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராணி வாணி தொடர்களில் ராணியாகவும்,  வாணியாகவும் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இந்த 
தொடர் கடந்த  5 வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது .  தற்பொழுது இந்த தொடர் நிறைவடையும் தருவாயில் உள்ளது.  இந்நிலையில் தனது  ராடான் மீடியா நிறுவனத்தின் மூலம் மற்றொரு சீரியல் தொடரை எடுப்பதில் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.  

Tamil Spark

இந்நிலையில்  சந்திர குமாரி என்னும் சரித்திர கதையை நாடகமாக எடுத்த முடிவு எடுத்துள்ளார்.  இந்த தொடரில் அவர் ஏழு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதற்காக சென்னை,  மும்பை உள்ளிட்ட நகரங்களில் மிக பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கி கொண்டிருக்கிறார்கள்.  இந்த நாடகத்தை பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா மிக பிரம்மாண்ட முறையில் இயக்கி வருகிறார்.   மேலும் இந்த தொடரில்  ராதிகாவின்  மகளாக தாமிரபரணி பானு நடிக்க நடிக்கிறார்.

இந்த தொடர் வருகின்ற அக்டோபர் மாத இறுதியில் சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Spark #sandra kumari serial #latest serial news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story