×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒருவழியாக ஓடிடியில் வெளியாகிறது இயக்குனர் பாலாவின் வர்மா! எப்போ தெரியுமா? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

Bala varma movie released on simplysouth

Advertisement

தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. அதனை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் முதலில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் பாலா இப்படத்தை இயக்கினார்.

படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வர்மா படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை என தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிடுவதை கைவிடுவதாக அறிவித்தது. பின்னர் அப்படம் கிரிசாயா இயக்கத்தில் துருவ் விக்ரம், பனிட்டா சந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியானது. மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் பாலா இயக்கத்தில் உருவான வர்மா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளிவரவிருப்பதாக சமீப காலமாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது அக்டோபர் 6-ம் தேதி வர்மா திரைப்படம் சிம்பிளி செளத் என்ற தளத்தில் ரிலீசாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் பாலா ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bala #varma #Simplysouth
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story