×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கவின் படத்தில், 30 வருஷத்திற்கு பிறகு மீண்டும் இணையும் ஜோடி! அடேங்கப்பா.. யார்னு பார்த்தீங்களா!!

கவின் படத்தில், 30 வருஷத்திற்கு பிறகு மீண்டும் இணையும் ஜோடி! யார்னு பார்த்தீங்களா!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

கவின் சின்னத்திரையில் மட்டுமின்றி,வெள்ளித்திரையிலும்  களமிறங்கி நட்புனா என்னா தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து  அவர் லிஃப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். திகில் கலந்த அப்படம் செம ஹிட்டானது. பின்னர் கவின் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் ”ஊர்குருவி” என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து கவின் உதவி இயக்குநர் கணேஷ் பாபு என்பவர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.  காதல் கதையை மையமாக கொண்ட இப்படத்தில் பிரதீப் அண்டனி, அபர்ணா தாஸ், ஹரிஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யாவும், நடிகர் பாக்கியராஜும் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் கடந்த 1992ஆம் ஆண்டு வெளிவந்த ராசுக்குட்டி என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் 30 ஆண்டுகளுக்கு பிறகு இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bakyaraj #ishwarya #kavin
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story