×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலில் அதிரடி மாற்றம்! இனி இப்படிதான்..வைரலாகும் வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

தற்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு பெரும் ரசிகர்களாக உள்ளனர். அதுவும் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல்களையே தவறாமல் அனைவரும் பார்த்து வந்தனர். 

 இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற தொடர் பாக்கியலட்சுமி. பொறுப்பான குடும்பத்தலைவி, அன்பான மனைவி, பாசம் நிறைந்த அம்மா, மரியாதையான மருமகள் என குடும்பத்தரசியாக இருக்கும் ஒரு பெண் சமாளிக்கும் பல சவால்களையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த தொடர் அமைந்துள்ளது.

பாக்கியலட்சுமி தொடர் விஜய் தொலைக்காட்சியில் இதுவரை மாலை 6.30 மணியளவில் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் தற்போது நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு அக்டோபர் 12 முதல் அதாவது வரும் திங்கள் முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதுகுறித்த ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #Bakyalakshmi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story