×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரண்டு ஆஸ்கார் வாங்கிய இசை வெள்ளம் பயில்வான் ரங்கநாதன்".? வெங்கட் பிரபுவின் ட்வீட்டால் அதிர்ச்சி.!

இரண்டு ஆஸ்கார் வாங்கிய இசை வெள்ளம் பயில்வான் ரங்கநாதன் .? வெங்கட் பிரபுவின் ட்வீட்டால் அதிர்ச்சி.!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு. சென்னை 600028, மங்காத்தா, மாநாடு போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனரான இவர் தற்போது  கஸ்டடி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

எப்போதும் கலகலப்பாக இருக்கும் வெங்கட் பிரபு அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆச்சரியமூட்டும் தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் பயில்வான் ரங்கநாதன் குறித்து  வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று  தற்போது பரபரப்பாக இருக்கிறது.


இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் போன்று  இரண்டு கைகளிலும் ஆஸ்கார் விருதுகளை வைத்திருக்கும் பயில்வான் ரங்கநாதனின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் வெங்கட் பிரபு "இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இசை வெள்ளம் பயில்வான் ரங்கநாதன் சாருக்கு வாழ்த்துக்கள்" என அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் எப்போது ஆஸ்கார் வாங்கினார் என ரசிகர்களுக்கு  குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. GV பிரகாஷின் புதிய திரைப்படத்தில் பயில்வான் ரங்கநாதன் நடித்துள்ளதாகவும் அந்த ப்ரொமோஷனுக்காக அவரது புகைப்படத்தை வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பயில்வான் ரங்கநாதனை பற்றிய எந்த செய்தி வந்தாலும் அது வைரலாவதால் ப்ரோமோஷனுக்காக இப்படி செய்ததாக தெரிகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#venkat prabhu #director #Bailwan ranganathan #oscars #tweet
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story