×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன ஒரு முழிடா சாமி...அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராதிகாவிடம் தப்பிக்க வழி தேடும் கோபி...! பரபரப்பான புரொமோ வீடியோ...

என்ன ஒரு முழிடா சாமி...அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராதிகாவிடம் தப்பிக்க வழி தேடும் கோபி...! பரபரப்பான புரொமோ வீடியோ...

Advertisement

பிரபல விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஓடி கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. சாதாரண குடும்பத் தலைவியின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிப்பரப்பாகும் இத்தொடருக்கு குடும்ப பெண்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. 

தற்போது பாக்கியலட்சுமி தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடரின் மெகா சங்கமம் தாத்தாவின் பிறந்தநாளுக்காக ஒன்றாக கூடியுள்ளனர். பாக்கியா பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தனது  உறவினர்கள் மற்றும் நெருங்கிய தோழியான ராதிகாவை மாமனாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைத்துள்ளார். இந்நிலையில் அந்த  பிறந்தநாள்  கொண்டாட்டத்திற்கு ராதிகா  வருவாரா, கோபி வீட்டில் உள்ளவர்களிடம் சிக்குவாரா என நிறைய கேள்விகள் மக்களிடம் உள்ளது.

இந்நிலையில் நாளை எபிசோடுக்கான புரொமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது. அதில், ராதிகா தனது மகள் மயூவுடன் கோபி வீட்டிற்கு வருகிறார், அவரைக் கண்டதும் கோபி திறு திறுவென முழிக்கிறார். நாளை அவர் ராதிகாவிடம் சிக்குவாரா அல்லது இந்த முறையிம் தப்பித்து விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.இதோ  அந்த ப்ரோமோ வீடியோ...

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Baakiyalaxmi #Promo video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story