×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு விருது அறிவித்த கேரள அரசு!

award for ilayaraja

Advertisement

இந்திய சினிமாவில் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருப்பவர் இளையராஜா,இவர் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்நிலையில்,  கேரள மாநில அரசு இவருக்கு ஹைரிவராசனம் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

அவருக்கு கொடுக்கப்படும் விருதோடு சேர்த்து அவருக்கு 1 லட்சம் ருபாய் பரிசும் வழங்கப்படுகிறது. இத்துடன் 'Worshipful Music Genius' என்ற பட்டமும் வழங்கப்படுவதாக கேரள அரசு கூறியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ilayaraja #music #award
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story