×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"விஜய் எனக்கு மனைவியை போல" அட்லீ கூறிய சுவாரஸ்ய தகவல்!!

விஜய் எனக்கு மனைவியை போல அட்லீ கூறிய சுவாரஸ்ய தகவல்!!

Advertisement

அட்லீ இயக்குனர் ஷங்கர் இயக்கிய நண்பன் மற்றும் எந்திரன் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பின் "ராஜா ராணி" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 

இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் . பின்னர் இவர் நடிகர் விஜயை வைத்து தெறி என்ற திரைப்படத்தை இயக்கினார். இது இவருக்கு வெற்றி படமாகவே அமைந்தது. 

பின்னர், இவர் இயக்கிய மெர்சல் மற்றும் பிகில் இரண்டிலுமே நடிகர் விஜய் நடித்து வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து பாலிவுட் சினிமாவிற்குள் நுழைந்த அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்னும் திரைப்படத்தை இயக்கினார். 

இந்த நிலையில், அட்லீயிடம் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சற்று வித்தியாசமான பதிலை அளித்துள்ளார். அதாவது விஜய் - ஷாருக்கான் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.

அதற்கு, நடிகர்கள் விஜய் - ஷாருக்கான் இடையே ஒருவரை தேர்வு செய்வது மிகவும் கடிமானது. ஒருவர் மனைவியை போல மற்றொருவர் தாயை போல, ஒருவரை விட்டுட்டு ஒருவரை தேர்வு செய்வது கடினம் என கூறியுள்ளார்.   

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actor vijay #Sharukh khan #atlee #Tamil Spark
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story