×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம மாஸ்! குக் வித் கோமாளி அஸ்வினுக்கு அடித்த அதிர்ஷ்டம்! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களான கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் வரும் வாரம் வைல்ட் கார்டு போட்டி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்று பிரபலமானவர் அஸ்வின். இவர் பல இளம்பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக தனது முழுத் திறமையையும் காட்டி வரும் அஸ்வின் இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி என்ற தொடரில் நடித்து இருந்தார்.

மேலும் சில விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவரை பெருமளவில் பிரபலமடைய செய்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். இந்நிலையில்  அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அஷ்வின் தற்போது மாஸான ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். அந்த ஆல்பம் வீடியோ நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் அப்பாடலின் போஸ்டர் மற்றும் ப்ரமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது
    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ashwin #album song
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story