பிரபல கிரிக்கெட் வீரரின் வில்லங்கமான கேள்விக்கு, ஒத்த புகைப்படத்தால் நச்சுனு பதிலளித்த சதீஷ்!! இப்படியொரு புதிய அவதாரமா?
ashwin asked mass question to sathish

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார். இவரது காமெடிக்கென பல ரசிகர்கள் உள்ளனர்.மேலும் நடிகர் சதீஷ் சாதாரணமாக யாருடன் பேசினாலும் அவர்களை கலாய்த்து தள்ளுவார். அவரது ட்விட்டர் பக்கத்திலும் இப்படிபட்ட நிகழ்வுகளை அதிகம் பார்க்கலாம்.
மேலும் பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 3 . இதில் பல போட்டியாளர்கள் வெளியாகி வரும்நிலையில், நாளுக்கு நாள் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.
மேலும் இந்நிலையில் சமீபத்தில் நடிகை கஸ்தூரி வைல்ட் கார்ட் என்ட்ரியாக க பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இந்நிலையில் நடிகர் சதிஷ் அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்வுகளை குறித்த கருத்துக்களை கிண்டல் செய்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சதிஷ் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட பிரபல கிரிக்கெட் வீரரான அஸ்வின், பிக்பாஸ் எண்ட்ரியா என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். உடனே நடிகர் சதீஷ் நித்யானந்தா போல் இருக்கும் சாமியார் வேடமணிந்து. இல்லை நான் ஆஸ்ரமம் ஆரம்பிக்கப் போறேன் ப்ரோ என கேலியாக பதிலளித்துள்ளார்.