பிரபல இளம் நடிகையுடன் விரைவில் திருமணம்! நடிகர் ஆர்யா வீட்டில் கெட்டிமேளம்!
Arya Shaiesha marriage date fixed

தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. தமிழ் சினிமாவில் பிளே பாய், ரொமான்டிக் நடிகர் என பேசப்படுபவர் நடிகை ஆர்யா. இதுவரை தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகளுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா. முதலில் நடிகை பூஜா, நயன்தாரா, நஸிரியா என பல்வேறு நடிக்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
அதன்பின்னர் தனக்கு திருமண ஆசை வாந்துவிட்டதாகவும், அதற்காக பெண் தேடுவதாகவும் கூறி இணையதளம் ஒன்றை ஆரம்பித்து அதில் பெண்கள் பதிவு செய்ய கூறி சர்ச்சையை கிளப்பினார். அதன் பின்னர் அது கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிளைக்கான ஏற்பட்டு என தெரியவந்தது.
அதன்பின்னர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள 16 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியில் மூன்று பெண்கள் தேர்வு செய்யப்பட்டு , அதில் ஒரு பெண்ணை ஆர்யா திருமணம் செய்துகொள்ள போவதாக கூறப்பட்டது. ஆனால் ஒருவரை தேர்வு செய்தால் மற்ற இருவர் வருத்தப்படுவார்கள் என கூறி மூவரையும் திருமணம் செய்துகொள்ள முடியாது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஆர்யா.
இந்நிலையில் நடிகர் ஆர்யா பிரபல நடிகை ஒருவரை காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்தன. அந்த நடிகை வேறு யாரும் இல்லை வனமகன் படத்தில் நடித்த சாயிஷா தான். இவர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்துள்ளார்.
கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது இருவரும் காதலித்ததாகவும் தற்போது இருவீட்டார் சம்மதத்தோடு வரும் வரும் மார்ச் மாதம் இவர்களின் திருமணம் நடைபெறும் எனவும், ரிசப்சன் சென்னையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.