×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முக்கிய நபருக்கு திருமண அழைப்பிதழ் வைத்த ஆர்யா!! அவரின் திருமணம் எங்கே தெரியுமா??

arya marriage

Advertisement


நடிகர் ஆர்யா 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பல வருடங்களாக திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். இவருக்கு திருமணம் செய்வதற்காகவே  எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியும் நடந்தது.

ஆனால் அந்த நிகழ்ச்சியின் கடைசி ரவுண்ட் வரை 3 பெண்களை வரவைத்து யாரையும் திருமணம் செய்யாமல் நிகழ்ச்சியை முடித்தனர். நடிகர் ஆர்யா தனது  திருமணம் தொடர்பான பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காதலர் தினத்தன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சாயிஷாவுடன் தனக்கு நடைபெறவிருக்கும் திருமணம் குறித்து பதிவிட்டிருந்தார்.
 
இந்தநிலையில், ஆர்யா, சாயிஷா திருமணம் குறித்து இருவீட்டார்களும் பேசி முடிவெடுத்துள்ளதாகவும், வரும் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் இஸ்லாமிய முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் மார்ச் 9ம் சங்கீத் விழாவும் மார்ச் 10ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறதாக தகவல் வந்துள்ளது. இவரின் திருமணவேளைவிறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் விஷாலை நேரில் சென்று பத்திரிக்கை கொடுத்து திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Arya #marriage #vishal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story