×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனாவுக்கு பலியான மனைவிக்கு பிரபலம் வெளியிட்ட உருக்கமான பதிவு...

கொரோனாவுக்கு பலியான மனைவிக்கு பிரபலம் வெளியிட்ட உருக்கமான பதிவு...

Advertisement

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவான ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதி, அதை பாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இதனை அடுத்து ஒருசில படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்த இவர், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரை வைத்து கனா என்ற படத்தை இயக்கி அதில் மாபெரும் வெற்றியும் பெற்றார். தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ராஜா மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இன்று தனது மனைவியின் பிறந்தநாள் என்பதால் ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை ட்வீட் செய்துள்ளார் அருண் ராஜா.

அதில் தனது மனைவியின் ஓவியத்தை ஷேர் செய்துள்ள அருண்ராஜா காமராஜ், எப்போதும் உன்னை மிஸ் பண்ணுகிறேன்... Happy birthday Paapi என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#arunraja kamaraj #birthday #missing
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story