×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏ.ஆர்.முருகதாஸ் ஆவேசம்...! காரணம் என்ன?

a.r.murugadoss-twit

Advertisement

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி இயக்குனர்களில் வெற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் படங்களை இயக்கி வருகிறார். மேலும் இவர் அவ்வப்போது படங்கள் தயாரித்தும் வருகிறார். தீனா திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் இவர் தற்போது முன்னணி நடிகர் தளபதி விஜயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி செய்து "சர்க்கார்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த படத்தின் இசை கடந்த அக்டோபர்  2 ம் தேதி வெளியாகி பல ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் கிளம்பியது. 

இந்நிலையில் இன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒன்றை பதிவு செய்துள்ளார். 
அதில் அவர் கூறியதாவது: 
அன்புள்ள சர்க்கார் நடிகர்கள், இந்த படத்தின் தயாரிப்பிற்காக பலர் தங்கள் கடின உழைப்பை வைத்திருக்கிறார்கள். இருந்தாலும், ஜூனியர் கலைஞர்களின் பல நேர்காணல்கள் உள்ளன, இது ஒழுக்கமற்றது. எதிர்காலத்தில், எங்கள் சம்மதமின்றி நேர்காணல்களை வழங்குவோருக்கு எதிராக கண்டிப்பான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

 

Dear Sarkar Cast n Crew,
So many people have put their hardwork for the making of this movie. Despite, there are many interviews by Junior artists, which is unethical. In the future, strict legal actions will be taken against people who give interviews without our consent.

— A.R.Murugadoss (@ARMurugadoss) October 5, 2018

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story