×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட, தொகுப்பாளினி அர்ச்சனாவா இது! முதன்முதலாக அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸை பார்த்தீர்களா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்ச

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக களமிறங்கி, நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்டியவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்த அவர் சில காரணங்களால் விஜய் டிவிக்கு தாவினர். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அனைத்து போட்டியாளர்களிடமும் அன்பு மழையை கொட்டினார். 

 ஆனாலும் அவர் தனக்கென ஒரு குரூப் அமைத்துகொண்டு அவர்களை விளையாட விடாமல் முடக்கியதாக மோசமான விமர்சனங்கள் எழுந்தது. அதனையெல்லாம் பொருட்படுத்தாத அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் தனது வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார்.

 அர்ச்சனா தனது ஆரம்பகட்ட சினிமா பயணத்தின்போது அட்டைபடம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார். அதனை தற்போது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நினைவு கூர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Archana #Frontpage #image
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story