முதன்முறையாக 2 மகள்களுடன் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி! வைரல் வீடியோ!
AR Rahman singing with his daughters
மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இதனையடுத்து இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சினிமாவில் நிறைய சாதனைகள் செய்துள்ளார். இந்தநிலையில் தற்போது அவரது மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் புதிய இசை கச்சேரி நடத்தியுள்ளார். முதன்முறையாக அவர் தனது மகள்களுடன் இணைந்து அஹிம்சா என்ற இசை ஆல்ப பாடலை நேற்று மும்பையில் பாடியுள்ளனர்.
மும்பையில் நடைபெற்ற U2 இசைக்கச்சேரி நிகழ்வில் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது இரு மகள்களான கதீஜா மற்றும் ரஹீமா உடன் இணைந்து கச்சேரி நிகழ்த்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ‘அஹிம்சா’ என்னும் சிங்கிள் ஒன்றை ரஹ்மான் குடும்பத்தார் பாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.