×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட..சூப்பரு! இசைபுயல் ஏ.ஆர். ரஹ்மான் வாயால் உடைந்த ரகசியம்! செம ஜாலியில் பிரபல முன்னணி நடிகர்!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் நடிகர் ப

Advertisement

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் நடிகர் பார்த்திபன் கடந்த 2019ஆம் ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை எழுதி, இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அப்படத்தில் முழுவதும் பார்த்திபன் மட்டுமே நடித்திருப்பார். இந்த படம் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. மேலும் இப்படத்திற்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பார்த்திபன் ஒத்த செருப்பு திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இரவின் நிழல் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட உள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார். இதுகுறித்து ஏ.ஆர் ரஹ்மானே விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் பார்த்திபன், 
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது! 
 Yes SIR is IN (Iravin Nizhal) பெருமை! அருமையில் - 3 பாடல்கள் கைவசம் அருகாமையில் இன்னொன்று-promotional song மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#parthiban #AR Rahman
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story