×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏ.ஆர் ரகுமானின் மகளது ஆடையை புகைப்படத்தோடு விமர்சனம் செய்த பிரபலம்! அதிரடியாக கதீஜா கொடுத்த பதிலடி!

ar rahman daughter answer to journalist thaslima nasreen

Advertisement

தமிழில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தனது இசையால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் பெருமளவில் பிரபலமான இவர் செய்யும் சிறுசெயல்கள் கூட செய்தியாகவும், சர்ச்சையாகவும்  மாறிவிடும். 

இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்று 10ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மும்பை தாராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஏ ஆர் ரகுமானின் மகள் கதிஜா கலந்து கொண்டார். அப்பொழுது அவர் இஸ்லாமிய முறைப்படி முகத்தை மறைத்து புர்கா அணிந்து வந்தார் இதனால் அப்பொழுதே பெறும் விமர்சனங்கள் எழுந்தது.  அதற்கு கதீஜா மற்றும் ஏ.ஆர்  ரகுமான் பதிலடி கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் தற்போதும் வங்கதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நான் ஏ.ஆர் ரகுமானின் இசையை பெரிதளவில் விரும்புகிறேன். ஆனால் அவரது அன்பான மகளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல உணருகிறேன்.கலாச்சார  குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள் கூட இவ்வாறு எளிதாக மூளைச்சலவை செய்யப் படுகின்றனர் என்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று கதீஜாவின் புகைப்படத்தை வெளியிட்டு குறிப்பிட்டிருந்தார்.

அது வைரலான நிலையில் கதிஜா ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  இந்த விவாதம் முடிந்து ஒரு வருடம் ஆனநிலையிலும்  மீண்டும் இது தொடர்பான விவாதங்கள் சுற்றிவருகிறது. நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளது. ஆனால் சிலர் பெண்கள் அணிய விரும்பும் ஆடை குறித்து கவலைப்படுகின்றனர். ஒவ்வொரு முறையும் இதுபோன்ற விவாதங்கள் எழும் போது எனக்குள் தீப்பற்றி எரிகிறது. நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. நான்  பலவீனமாக இல்லை வாழ்க்கையில் நான் தேர்வு செய்த விஷயங்களுக்காக வருத்தப்படவில்லை. பெரும்  மகிழ்ச்சி அடைகிறேன் பெருமிதம் கொள்கிறேன்.

மேலும் தஸ்லீமாவின் பெயரை குறிப்பிட்டு எனது ஆடைகள் உங்களுக்கு மூச்சுத்தினறல் ஏற்படும்வகையில் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். சுத்தமான காற்றை சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படவில்லை.அப்படியே எனது நடவடிக்கைகளில் உறுதியாக நிற்கிறேன். பெண்ணியம் என்பது பிறரை தாழ்த்திப் பேசுவது இல்லை. அவரது தந்தையை பிரச்சினைக்குள் இழுத்துவிடுவதும் இல்லை.மேலும்  உங்களது ஆய்வுக்காக எனது புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பியதாகவும் ஞாபகம் இல்லை என்று கூறியுள்ளார்.
 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#AR Rahman #taslima nasreen #kadeeja rahman
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story