இது தான் காரணமா..? 12 கோடி ரூபாய் ஆடம்பர வீட்டை அவசர அவசரமாக விற்கும் அனுஷ்கா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
நடிகை அனுஷ்கா ஷெட்டி ஹைதராபாத்தில் உள்ள ரூ.12 கோடி மதிப்பிலான வீட்டை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா ஷெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ரூ.12 கோடி மதிப்பிலான தனது ஆடம்பர வீட்டை அவசரமாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டை அவர் விற்க முன்வந்திருப்பது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது. இதற்குப் பின்னால் பொருளாதார காரணமா அல்லது வேறு திட்டமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
பட வாய்ப்புகள் குறைந்ததால் சொத்தை விற்கிறாரா?
ஒரு காலத்தில் ரஜினிகாந்த், விஜய், சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்த அனுஷ்கா, தற்போது படங்களில் நடிப்பது குறைந்துள்ளது. குறிப்பாக, ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக உடல் எடையை அதிகரித்த பின்னர், பழைய தோற்றத்துக்குத் திரும்புவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், இதனால் பட வாய்ப்புகள் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எனக்கு எச்சில் ப்ராப்ளம் இல்லை..! சீன் பட வெற்றி விழாவில் நஸ்ரியா, நஸ்லென் செய்த அந்த ஒரு காரியம்..! வைரலாகும் வீடியோ..!!!
இதன் காரணமாக தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகே அவர் படங்களில் நடித்து வருவதாகத் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனது பிரம்மாண்ட வீட்டை விற்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய வீட்டுக்கு மாறத் திட்டமா?
அனுஷ்கா வீட்டை விற்கும் முடிவுக்கு பொருளாதார நெருக்கடி காரணமல்ல என்றும், வேறு பகுதியில் புதிய வீடு வாங்குவதற்காகவே இந்த விற்பனை முடிவை எடுத்துள்ளதாகவும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
திருமணம், வெளிநாட்டில் குடியேறுவது குறித்து பரவும் தகவல்கள்
இதற்கிடையே, அனுஷ்கா நீண்ட காலமாக காதலித்து வரும் பிரபல தெலுங்கு நடிகரைத் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்காகவே தனது சொத்துகளை விற்பனை செய்வதாகவும் சிலர் கூறுகின்றனர்.
ஆனால், இந்தத் தகவல்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்பாடும் இல்லை. திருமணம் தொடர்பான கேள்விகளுக்கு இதுவரை புன்னகையுடன் பதிலளித்து வரும் அனுஷ்கா தரப்பிலிருந்தும் வீட்டை விற்பது அல்லது திருமணம் குறித்தும் எந்த விளக்கமும் வெளியாகவில்லை.