ஒருவழியா இங்கேயும் வந்துட்டாங்க! அதிரடியாக புதிய களத்தில் இறங்கிய நடிகை அனுஷ்கா! வரவேற்கும் ரசிகர்கள்!
Anushka join in twitter

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. மேலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து செம கெத்தாக நடித்து வந்த அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்திருந்த பாகுபலி-2 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனையும் படைத்தது.
இந்நிலையில் தற்போது அனுஷ்கா, ஹேமன் மதுக்கூர் இயக்கத்தில் மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் அனுஷ்கா காது கேளாத, வாய் பேச முடியாத ஓவிய பெண்ணாக நடித்துள்ளார். கிரைம் மற்றும் திரில்லர் படமான சைலன்ஸ் திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியான நாளை அமேசான் ப்ரைமில் ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே ஆக்டிவாக இருந்த நடிகை அனுஷ்கா தற்போது புதிதாக டுவிட்டரில் இணைந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் தனது முதல் பதிவில், அனைவருக்கும் வணக்கம். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது என் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு. சில சுவாரஸ்யமான அப்டேட்களுக்கு இதைப் பின் தொடருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அனுஷ்காவை வரவேற்றுள்ளனர்.