×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னோட அம்மா அழுதுட்டாங்க.. ரொம்ப கஷ்டமாகிருச்சு.! பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அனு இம்மானுவேல்!!

என்னோட அம்மா அழுதுட்டாங்க.. ரொம்ப கஷ்டமாகிருச்சு.! பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அனு இம்மானுவேல்!!

Advertisement

மலையாளத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சுவப்னா சஞ்சரி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அனு இம்மானுவேல். தொடர்ந்து அவர் நிவின் பாலி ஹீரோவாக நடித்த ஆக்சன் ஜீரோ பிஜு என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அனு இம்மானுவேல் தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இவ்வாறு படங்களில் பிசியாக இருந்து வரும் இம்மானுவேல் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனின் தம்பியும்,  பிரபல நடிகருமான அல்லு ஷிரிஷை காதலிப்பதாக தகவல்கள் பரவியது.

இதுகுறித்து அனு இம்மானுவேல் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், அல்லு ஷிரிஷை ஊர்வசிவோ, ரக்ஷசிவோ என்ற படத்திற்கு முன்பு வரை எனக்கு தெரியாது. படத்தின் பூஜையின் போதே நான் அவரை சந்தித்தேன். பின்னர் காபி ஷாப் ஒன்றில் இருவரும் இந்த படத்தின் கேரக்டர் குறித்து பேசினோம். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நாங்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவியது.

இதனைக் கண்டு எனது அம்மா அழுதுவிட்டார். அதனை பார்த்ததும் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்த காலத்தில் கூட ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து காபி குடித்தால் இருவரும் காதலிப்பதாக வதந்திகளை பரப்பி விடுகின்றனர். நான் யாரையும் காதலிக்கவில்லை என அனு இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Anu immanuvel #Love #Allu sirish
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story