×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் தொடங்கவுள்ள அண்ணாத்த படப்பிடிப்பு! அதுவும் இந்த முறை எங்கு தெரியுமா? குஷியில் ரசிகர்கள்!

 சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்ப

Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ் ,சூரி ,சதீஷ் உள்ளிட்ட  பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்றது. அப்பொழுது அங்கு பணியாற்றிய 4 டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர்.  மேலும் நடிகர் ரஜினியின் உடல்நிலையும் சரியில்லாமல் போனநிலையில் படப்பிடிப்பு நடைபெறவில்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு மார்ச் 15 முதல் தொடங்கபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இதற்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Annatha #chennai #rajini
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story