×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை அஞ்சலி திருமணம் செய்துகொள்ளப்போவது இவரைதானா? அவரே கூறிய தகவல்!!

anjali goes to marry tamil paiyan

Advertisement

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அதனை தொடர்ந்து அவர் அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து அவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜெய்யுடன் இணைந்து அவர் நடித்த எங்கேயும் எப்போதும் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. 

அதனை தொடர்ந்து ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் அஞ்சலி தற்போது விஜய்சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அஞ்சலியிடம் திருமணம் குறித்து கேட்டபோது அவர், நான் நடித்த ஹீரோக்களில் பெரும்பாலானவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஜெய்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எப்பொழுது திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என தெரியவில்லை.

மேலும் எனது திருமணம் எப்பொழுது எனவும் எனக்கு தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக நான் ஒரு தமிழ் பையனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#anjali #marriage #tamil boy
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story