×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அம்மா ரொம்ப கருப்பா இருப்பாங்க! பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கிய அனிதா சம்பத்! வைரல் வீடியோ.

பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் கண்கலங்கி அழும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் கண்கலங்கி அழும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது நடந்துவருகிறது. இதில் ரியோ, ஷிவானி, ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, அனிதா சம்பத் போன்ற ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு விளையாடிவருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான இன்று காட்சி ஒன்றில் அனிதா சம்பத் அழும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சக போட்டியாளர்களில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஹார்ட் கொடுக்கும் காட்சியில், இதை நான் அறந்தாங்கி நிஷாவுக்கு கொடுப்பதாகவும், ஏனென்றால் அவர் பார்ப்பதற்கு தனது அம்மா போன்று இருப்பதாகவும் அனிதா சம்பத் கூறியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல், அம்மா மிகவும் கருப்பாக இருப்பார், நகை போட்டால் தனது நிறம் மிகவும் டார்க்காக தெரியும் என தன்னையே தாழ்த்தி கொள்வார். இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் பெற்றோர் சந்திப்பு போன்றவற்றிற்கு கூட வர மிகவும் யோசிப்பார் என கூறி அனிதா சம்பத் கண்கலங்கியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigg boss tamil #Season 4 promo videos #Day 2
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story