×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருநங்கையாக மாறிய அங்காடி தெரு நடிகர்!! புகைப்படத்தை கண்டு வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

angadi theru actror changed as trangender

Advertisement

தமிழ் சினிமாவில் அங்காடி தெரு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் மகேஷ். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது.

அதனை தொடர்ந்து மகேஷ் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், யாசகன், வேல்முருகன் போர்வேல்ஸ் போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தார். அப்படங்கள் அவருக்கு சொல்லிகொள்ளுமளவிற்கு பெயரை எடுத்து தரவில்லை.

அதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த மகேஷ் தற்போது தேனாம்பேட்டை மகேஷ் என்னும் திரைப்படத்தில் நடிக்கஉள்ளார். இவருக்கு ஜோடியாக  நடிகை அனிஷா நடிக்கஉள்ளார்.

கிராண்ட் சர்வீஸ் மேக்கர்ஸ் பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிக்க, சித்திக் இயக்கும் இப்படத்தில், வாட்டர் கேன் சப்ளை செய்யும் இளைஞராகவும், திருநங்கையாகவும் நடித்துவருகிறார். இந்நிலையில் திருநங்கையாக மகேஷ் இருக்கும் புகைப்படம் வெளியாகி பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mahesh #Angadi theru
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story