மீடியா வெளிச்சமே இல்லாமல் இருக்கும் வில்லன் நடிகர் ஆந்தராஜின் மகன் மகள்..! இவருக்கு இம்புட்டு பெரிய பசங்களா.! வைரல் புகைப்படம்.!
Andharaj family photos

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் வந்து போயிருந்தாலும் சிலர் எப்போதும் மக்கள் நினைவில் நிலைத்திருப்பது உண்டு. அதுபோன்ற நடிகர்களில் ஒருவர்தான் வில்லன் நடிகர் ஆனந்தராஜ். தமிழ் சினிமாவில் 90 களில் இருந்து நடித்துவரும் இவர் ஆரம்பத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அதன் பிறகு வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.
தமிழ் சினிமாவில் மிரட்டல் வில்லனாக வந்த இவர் தற்போது காமெடி வில்லனாக மாறிவிட்டார். நானும் ரௌடி தான், சிலுக்குவர் பட்டி சிங்கம் போன்ற படங்களில் இவரது சிரிப்பு வில்லத்தனத்தை கலந்து நடித்திருப்பார். கடைசியாக பிகில் படத்தில் விஜயுடன் நடித்த இவர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.
இந்நிலையில் இவரது குடும்ப புகைப்படம் ஓன்று தற்போது இணையத்தில் உலா வருகிறது. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் இவரது பிள்ளைகள் மீடியா வெளிச்சமே இல்லாமல் இருக்கும் நிலையில் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் மகளா என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.