தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னை நியாபகம் இருக்கா "சண்டா".. 90 கிட்ஸை மிரளவிட்ட மந்திரவாதி நடிகருக்கு இப்படியும் சோகம்.!

என்னை நியாபகம் இருக்கா சண்டா.. 90 கிட்ஸை மிரளவிட்ட மந்திரவாதி நடிகருக்கு இப்படியும் சோகம்.!

Ammoru Amman movie Famous Actor Rami Reddy Advertisement

 

கோடி இராமகிருஷ்ணா இயக்கத்தில், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சுரேஷ், ராமி ரெட்டி, குழந்தை நட்சத்திரம் சுனைனா உட்பட பலர் நடித்து தெலுங்கில் வெளியான திரைப்படம் அம்மாரு. இப்படம் கடந்த 1995ல் பயங்கர ஹிட்டடிக்கவே, தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்கில் வெளியிடப்பட்டது. நம் மக்கள் சாமி படம் என்றால் விரும்பி பார்ப்பார்கள் என்பதால், படம் தமிழிலும் மகத்தான வெற்றி பெற்றது. 

அன்றைய நாட்களில் இருந்து இன்று வரை அம்மன் திரைப்படம் தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது. இப்படத்தில் வில்லன் மந்திரவாதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ராமி ரெட்டி. இவர் சண்டா என உரையாடும் வசனங்கள் இன்று வரை பெயர்போனது.

Ammoru

என்றளவில் 90 கிட்ஸ் இளைஞர்களால் பயத்துடன் பார்க்கப்பட ஜண்டா, இன்றுள்ள 2கே கிட்ஸால் கலாய்க்க உபயோகம் செய்யப்பட்டு வருகிறது.  இவர் உடல் எடை மெலிந்த நிலையில் காணப்படும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. 

எப்படி உடல் வாகுடன் இருந்தவர் இப்படி இருக்கிறாரே? என தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தாலும், அவர் கடந்த 2011ல் கிட்னி செயலிழப்பால் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 1995ல் இருந்த உடலும், 2011ம் ஆண்டு உயிரிழக்கும்போதும் இருந்த உடல் வித்தியாசத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ammoru #Amman #Amman Movie #tamil cinema #Rami Reddy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story