×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை அமலாபாலுக்கு இப்படியொரு நிலைமையா? ஏன் இந்த முடிவுக்கு வந்துட்டாங்க! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா

Advertisement

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். இப்படம் பெருமளவில் பிரபலமாகவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் மைனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அமலாபால் விஜய், தனுஷ் ஆர்யா, விஷ்ணு விஷால் என பல பிரபலங்களுடன் இணைந்து  ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 அவர் 2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜயை  திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து அமலாபால் பல சர்ச்சையான மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று பிசியாக நடித்து வந்தார். அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் பிஸியான அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். 

இந்த நிலையில் அமலாபால் தெலுங்கில் பிட்டா காதலு என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது தொலைக்காட்சி சீரியலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அமலாபாலுக்கு இந்த நிலைமையா என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#amala paul #serial
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story