அம்மாவானார் ஆலியா மானசா! ஆனால் அவருக்கு இப்படியொரு ஆசையாம்..வருத்தத்துடன் மனம் திறந்தார் சஞ்சீவ்!
Alya wish while pregnancy
iபிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. இதில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் கார்த்திக், செண்பா என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்தனர். மேலும் அதன்மூலம் இவர்கள் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். அதுமட்டுமின்றி அவர்கள் சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் காதலிக்க ஆரம்பித்தனர்.
அதனை தொடர்ந்து இருவரும் அவ்வப்போது ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது, விளம்பர படங்களில் நடிப்பது, டப்மாஷ் வீடியோ, புகைப்படங்கள் என மிகவும் ஜாலியாக சுற்றித்திரிந்தனர். பின்னர் யாரும் எதிர்பாராதவிதமாக ஆலியா பிறந்தநாள் அன்று இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு ஆலியா மானசா குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை மேலும் சஞ்சீவ் குடும்பத்தின் ஆசியுடனே இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.இதனை கேட்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்துள்ளனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர் சஞ்சீவ் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவரது குடும்பத்தினரிடம் கூறவேண்டும் என ஆசைப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவரது அப்பாவை சந்தித்து இதுகுறித்து கூறினோம். அவர் கண்கலங்கி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவரது அம்மா இன்னும் பேசவில்லை. மேலும் ஆலியாவிற்கு தனக்கு பிறக்கப் போகும் குழந்தையை முதலில் அவரது அம்மா தான் தூக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அது நடக்க வேண்டும். ஆலியாவின் அம்மா விரைவில் மனம் மாறி, ஏற்றுக்கொள்ள வேண்டுமென சஞ்சீவ் வருத்தத்துடன் கூறியுள்ளார்.