×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அப்படி போடு.. சமந்தா படத்தில் அறிமுகமாகும் பிரபல மாஸ் ஹீரோவின் மகள்! யார்னு தெரியுமா??

சமந்தா நடிப்பில் உருவாகும் சகுந்தலம் படத்தில் பல முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் மகள் குழந

Advertisement

சமந்தா நடிப்பில் உருவாகும் சகுந்தலம் படத்தில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

தமிழ் திரையுலகில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த ஃபேமிலி 2 என்ற வெப்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் அவரது நடிப்பை பலரும் பாராட்டினர்.

நடிகை சமந்தா கைவசம் காத்து வாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் போன்ற படங்கள் உள்ளன. இதில் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு  சகுந்தலம் படம் உருவாகி வருகிறது. இதனை குணசேகர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் அர்ஹா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தனது மகள் நடிக்கவிருப்பதை மிகவும் பெருமையாக நடிகர் அல்லு அர்ஜுன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#allu arjun #samantha #daughter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story