×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வளைத்து கட்டிய போட்டியாளர்கள்.! கொந்தளித்த சேரன்! வனிதாவுக்கு இப்படியொரு நிலையா? வைரலாகும் வீடியோ!!

all contestans angry talk with vanitha

Advertisement

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எழுபது நாட்களை கடந்துவிட்ட பிக்பாஸ் சீசன் 3  தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.

கவின், சாண்டி, சேரன், ஷெரின், தர்சன் , வனிதா, முகென், லாஸ்லியா ஆகிய 8 பிரபலங்கள் விளையாடி வருகின்றனர். வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்ததில் இருந்து பல பிரச்சினைகள் வெடித்தது.  

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் மீண்டும்  சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் வந்துள்ளனர். இதனால் பல சர்ச்சைகள் கிளம்பி பூகம்பம் வெடிக்கும் நிலையில், ஒவ்வொரு நாளையும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஷெரின் மற்றும் தர்ஷன் ஆகியோருக்கு இடையேயுள்ள உறவு குறித்து வனிதா சர்ச்சைக் கருத்தை வெளிப்படுத்திய நிலையில் ஷெரின் மற்றும் வனிதாவிற்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து வனிதா குரூப் மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அனைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்பொழுது அனைவரும் அவரிடம் தொடர் கேள்விகளை எழுப்பி வந்த வேளையில், வனிதாவின் அலட்சியமான பதிலால் ஒருகட்டத்தில்  ஆத்திரமடைந்த சேரன் நாங்கள் முட்டாள்களா என கடுமையாக பொங்கி எழுந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vanitha #bigboss #Cheran
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story