தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கால்களில் முத்தம்.. தனது ரோல் மாடலுக்கு மனம் உருகி மரியாதை செலுத்திய நடிகர் அஜித்குமார்.! வைரல் வீடியோ..

நடிகர் அஜித்குமார் தனது ரோல் மாடலும், மறைந்த கார் ரேஸ் வீரருமான அயர்டன் சென்னாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Ajithkumar tribute to his role model car racer Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் அண்மையில் வெளிவந்த "குட் பேட் அக்லி" படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  அஜித்குமார் சிறந்த நடிகர் மட்டுமின்றி கார் பந்தய ரேஸரும் கூட. இந்த ஆண்டு துவக்கத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் அணி 3 ஆம் இடம்பிடித்தது. 

 கார் ரேஸில் கலக்கும் அஜித்குமார்

தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் ரேஸில் அஜித்குமார் அணி 3ஆம் இடம் பிடித்தது. பின் பெல்ஜியம் ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் பந்தயத்தில் 2ஆம் இடம்பிடித்து அசத்தியது. மேலும் அஜித் தற்போது GT 4 சீரிஸ் ஐரோப்பிய கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.  இதற்கிடையில் அஜித்குமார் தனது ரோல் மாடலும், மறைந்த கார் ரேஸ் வீரருமான அயர்டன் சென்னாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 42 கிலோ உடல் எடையை குறைத்த ரகசியத்தை ரசிகர்களுக்கு சொன்ன அஜித்! இப்படித்தான் என்று அவரே கூறியுள்ளார் பாருங்க...

 ரோல் மாடலுக்கு மரியாதை

அயர்டன் சென்னா பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பார்முலா 1 கார்பந்தய வீரர். இவர் மெக்லாரன் அணிக்காக பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். இவர் 1994 மே 1 அன்று சான் மரினோ கிராண்ட் ப்ரீயில் (இமோலா) வில்லியம்ஸ் அணிக்காக கார் பந்தயத்தில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் நடிகர் அஜித் குமார்  அவரது உருவசிலையின்  கால்களுக்கு முத்தமிட்டு, அவரது ஹெல்மெட்டை வைத்து மனம் உருகி மரியாதை செலுத்தியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதையும் படிங்க: பத்ம பூஷன் விருதை பெற்ற அஜித் மனைவியை பற்றி பெருமையாக கூறிய விஷயங்கள்! இணையத்தில் வைரலாகும் பேட்டி!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith Kumar #car race #Role model
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story