×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. அஜித்தின் மகனா இது! குட்டி தல எப்படி வளர்ந்துட்டாரு பார்த்தீர்களா! இணையத்தை கலக்கும் ஸ்டைலிஷ் புகைப்படம்!

தல அஜித்தின் மகன் ஆத்விக் நன்கு கிடுகிடுவென வளர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது பிறந்தநாள் மற்றும் படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருவர்.

இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தல அஜித் அமர்க்களம் படத்தில் நடித்தபோது அவருக்கு நடிகை ஷாலினியுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

அஜித் மற்றும் ஷாலினி இருவருமே எந்த இடமாக இருந்தாலும் தங்களுடன் செல்பி எடுத்துக்கொள்ள ஆசைப்படுபவர்களை மதித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்வர். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் தல அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்குடன் எடுத்துக்கொண்ட  புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைக்கண்ட ரசிகர்கள் குட்டி தல நல்லா கிடுகிடுவென வளர்ந்துட்டாரு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith #aadvik #latest photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story