×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாத்தாலே நாக்கு ஊறுதே.. சக பைக் ரைடர்களுக்காக பிரியாணி சமைத்த நடிகர் அஜித்.! வேற லெவல் வீடியோ!!

பாத்தாலே நாக்கு ஊறுதே.. சக பைக் ரைடர்களுக்காக நடிகர் அஜித் செய்துள்ளதை பார்த்தீங்களா.! வேற லெவல் வீடியோ!!

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி  இயக்குகிறார். விடாமுயற்சி படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. அங்கு கடும் பனிப்பொழிவால் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித்திற்கும் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் பூரண குணமடைந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் அஜித் மீண்டும் தற்போது பைக் ரைடு மேற்கொண்டுள்ளார். 

அவருடன் நடிகர் ஆரவ் மற்றும் மேலும் சில நண்பர்களும் பைக் ரைடு சென்றுள்ளார். இந்நிலையில் ரைடு சென்ற இடத்தில் நடிகர் அஜித் தன்னுடன் வந்த நண்பர்களுக்காக மணக்க மணக்க தன் கையாலே பிரியாணி செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் அஜித் பிரியாணி செய்வதை பார்த்தாலே நாக்கு ஊறுதே என கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith #biryani #Bike ride
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story