×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் அஜித் வீட்டு சுற்றுச்சுவரை இடித்த அதிகாரிகள்.. இது தான் காரணமா.?! 

நடிகர் அஜித் வீட்டு சுற்றுச்சுவரை இடித்த அதிகாரிகள்.. இது தான் காரணமா.?! 

Advertisement

கோலிவுட் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார், நடிப்பு மட்டுமல்லாமல் துப்பாக்கி சூடுவது மற்றும் பைக் ரேசிங் போன்ற பல்வேறு திறமைகளை தன்னகத்தே வைத்து சாதனை செய்து வருகிறார் நடிகர் அஜித்குமார். 

இறுதியாக நடிகர் அஜித்குமார் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவரது நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது, நடிகர் அஜித்குமாரின் ஈஞ்சம்பாக்கம் வீட்டில் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. 

ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மழை நீர் செல்வதற்காக சாலை விரிவாக்க பணிகள் மற்றும் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, அந்த பகுதியில் இருக்கும் பலருடைய வீட்டு சுற்று சுவர்கள் இடிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகளுக்காக நடிகர் அஜித்குமார் வீட்டின் சுற்று சுவரின் ஒரு பகுதியும் இயந்திரத்தின் மூலம் அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் அஜித்குமாரின் வீட்டிற்கு வெளியில் பெரிய அளவில் ஒரு பள்ளம் தோண்டப்பட்டு இருக்கும் காரணத்தால், அவர்கள் வீட்டில் இருந்து வெளியில் செல்ல ஒரு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#அஜித்குமார் #Eenjampakkam #chennai #ajith house
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story