ஒருவரை வீட்டுக்கு வர சொல்லி தல அஜித் செய்த மிகப்பெரிய செயல் -வியந்து போன பிரபல நடிகர்!
ajith gave surprise to krishna

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிகர் என்பதை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் கெத்து காட்டுவார் தல அஜித்.
இந்நிலையில் நடிகர் அஜித் பற்றி கழுகு படத்தின் ஹீரோ கிருஷ்ணா அவர்கள் மிகவும் பெருமையாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசுயுள்ளார்.
தல அஜித் அவர்கள் மிகவும் குழந்தை மனம் கொண்டவர். மேலும் ஒருவர் எதைக் கேட்டாலும் புன்னகையுடன் செய்யும் மனப்பான்மை உடையவர் எனவும் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் கிருஷ்ணா ஒருமுறை அஜித்திடம் ஆளில்லா விமானம் செய்வது எப்படி என கேட்டுள்ளார்.அதனை நினைவில் வைத்து தல அஜித் அவர்கள் ஒருநாள் கிருஷ்ணாவை தன் வீட்டிற்கு வரவழைத்து ஆளில்லா விமானம் செய்து காட்டியுள்ளார்.
ஒருவர் சொன்னதை மறக்காமல் அதை நினைவில் வைத்து நேரில் அழைத்து சொன்னது எல்லாம் மிகப்பெரிய செயல். இதை தான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார்.