×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சட்டசபை.. முதல்வர் நாற்காலியில் நடிகர் அஜித்! அவரோட ரசிகர்கள் செய்த வேலையை பார்த்தீங்களா!!

சட்டசபை.. முதல்வர் நாற்காலியில் நடிகர் அஜித்! ரசிகர்கள் செய்த வேலையை பார்த்தீர்களா!!

Advertisement

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அஜித். இவருக்கென நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவரது பிறந்தநாள், படங்கள் வெளியாகும் நாட்கள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாவைப் போல கொண்டாடுவர். மேலும் ரசிகர்கள் அவரை தல தல என கொண்டாடி வந்தனர்.

இந்தநிலையில் அண்மையில் அவர் ரசிகர்கள் தன்னை தல என்று அழைக்கக் கூடாது என அறிக்கை வெளியிட்டிருந்தார். அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித்தை அரசியலுக்குள் இழுக்கும் நோக்கில் மதுரையைச் சேர்ந்த தூங்காநகரம் அஜித் ஃபேன்ஸ் ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில் சட்டசபை முகப்பு கட்டடம் இருக்க, பின்னணியில் முதல்வர் நாற்காலியில் அஜித்குமார் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் எங்களின் வலிமையை பட்டி தொட்டியும் தெரியும், சட்டசபையும் அறியும் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. அந்த போஸ்டர் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith #poster
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story