×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித்துடன் மோதும் பிரபல நடிகர்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

ajith and sivakarthickeyan movie release on may 1

Advertisement

சீமராஜா படத்தைத் தொடா்ந்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் மிஸ்டர்.லோக்கல். இந்த படத்தில் சிவகாா்த்திகேயனுக்கு ஜோடியாக வேலைக்காரன் படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிக்கிறாா். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, ராதிகா சரத்குமாா், சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.. 

மேலும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படம் முழுவதும் காமெடிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாகி வருகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில் மிஸ்டர்.லோக்கல் படம் வருகின்ற உழைப்பாளா் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது. 



 

இதற்கிடையில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் அஜித்குமாரின் பிங்க் திரைப்பட ரீமேக் படமும் மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sivakarthickeyan #Ajith #may 1
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story