×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நான்கு முறை வாய்ப்பு வந்தும் ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகை!" யார் மற்றும் எந்தப் படம் என்று தெரியுமா?

நான்கு முறை வாய்ப்பு வந்தும் ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகை! யார் மற்றும் எந்தப் படம் என்று தெரியுமா?

Advertisement

சூப்பர் ஸ்டார் என்றால் சிறிய குழந்தைக்கு கூட தெரியும். அந்தளவுக்கு தன் ஸ்டைலான நடிப்பு மற்றும் மேனரிஸத்தால் அனைவரையும் கவர்ந்தவர் ரஜினிகாந்த். "அபூர்வ ராகங்கள்" படத்தில் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை ரஜினியை பிடிக்காதவர்கள் யாருமில்லை எனலாம்.

அதேபோல் ரஜினியுடன் ஒரு சீனிலாவது நடித்து விட மாட்டோமா என்று ஏங்காத நடிகர், நடிகைகளும் இல்லை எனலாம். அந்தளவிற்கு ரஜினிக்கு திரைத்துறையிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் ரஜினியுடன் நடிக்க வந்த நான்கு பட வாய்ப்புகளை நடிகை ஐஸ்வர்யா ராய் மறுத்துள்ளாராம்.

ரஜினியுடன் 100வது படமான சிவாஜியில் முதலில் சதா கேரக்டரில் ஐஸ்வர்யா ராயை தான் நடிக்க கேட்டார்களாம். அதே போல் சந்திரமுகி படத்தில் ஜோதிகா கேரக்டரில் நடிக்கவும் முதலில் ஐஸ்வர்யா ராயை தான் அணுகினார்களாம். இதுகுறித்து ரஜினியே ஒரு விழாவில் கூறியுள்ளார்.

மேலும் பாபா படத்திலும் நடிக்க கேட்டபோது விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா ராய். இதையடுத்து படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரிலும் நடிக்க மறுத்துள்ளார். இறுதியாக ரஜினியுடன் எந்திரன் படத்தில் தான் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராய்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajini #actor #movie #Trending #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story