பட வாய்ப்பு இல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றி தெரியும் பொன்னியின் செல்வன் பட நடிகை..
பட வாய்ப்பு இல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றி தெரியும் பொன்னியின் செல்வன் பட நடிகை..
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழில் முதன் முதலில் விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்சன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
மலையாளத்தில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, தமிழிலும் கட்டாகுஸ்தி, ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இப்படங்கள் இவருக்கு பெரிதும் கை கொடுக்கவில்லை.
இதன்படி மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் பட வாய்ப்புக்காக வித்தியாசமான போட்டோ சூட் செய்து தனது புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இப்புகைப்படத்தில் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.