×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அம்மாடியோவ்.. ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு இவ்வளவா.! என்னவெல்லாம் வச்சுருக்காங்க பார்த்தீங்களா!!

அம்மாடியோவ்.. ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு இவ்வளவா.! என்னவெல்லாம் வச்சுருக்காங்க பார்த்தீங்களா! தலைசுற்றிய ரசிகர்கள்

Advertisement

கடந்த 1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று  பெருமளவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராய். அதனைத் தொடர்ந்து ஹீரோயினாக களமிறங்கிய அவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யாராயின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 766 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் ஒரு நாள் நடிக்க விளம்பரங்களுக்கு 
6 முதல் 7 கோடி, திரைப்படங்களில் நடிக்க 10 முதல் 12 கோடி சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. 

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்த அவர் மும்பையில் 112 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவில்  வசித்து வருகிறாராம். மேலும் அவருக்கு 
பாந்த்ராவில் 21 கோடி ரூபாய் மதிப்பில் தனி பங்களா உள்ளதாம். துபாயில் ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்டில் சொகுசு வில்லா ஒன்றும் உள்ளதாம்.

அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராய் 7.95 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார், 1.60 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ், 1.58 கோடி மதிப்புள்ள ஆடி ஏ8எல், 2.33 கோடி மதிப்புக் கொண்ட லெக்சஸ் எல் எக்ஸ் 570 மற்றும் 1.98 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் எஸ்500 உள்ளிட்ட சொகுசு கார்களை யும் வைத்துள்ளாராம். விரைவில் இவரது சொத்து மதிப்பு 1,000 கோடியை எட்டலாம் என கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aishwarya rai #property
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story